2021 மே 06, வியாழக்கிழமை

உலக சுற்றுலா தினத்தையொட்டி மட்டக்களப்பில் போட்டி நிகழ்வுகள்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,கே.எஸ்.வதனகுமார்,சுக்ரி,ரி.லோஹித்)

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல போட்டி நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் ஆரம்பமாகின.

கிழக்குமாகாண முதலமைச்மைச்சரும் மாகாண சுற்றுலா அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வுகளில் மாகாண அமைச்சர்கள் உட்பட உயர் அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

இன்று காலை மட்டக்களப்பு வாவியில் தோணி ஓட்டம், நீச்சல் போட்டி உட்பட பல்லேறு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை கல்லடி நாவலடி கடற்கரை மைதானத்தில் சுற்றலா தின பல்வேறு வைபவங்கள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் வகையில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகளை கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று சனிக்கிழமை மாலை ஒளியேற்றி ஆரம்பித்து வைத்தார்.  அத்துடன்,  கல்லடி மெரினா வீச்சில் பண்பாட்டுப் பவனியுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.(படங்கள்:-கே.எஸ்.வதனகுமார், சுக்ரி,ரி.லோஹித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .