2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இடைநிறுத்தப்பட்ட வீட்டு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,கே.எஸ்.வதனகுமார்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நோர்வே அகதிகளுக்கான நிறுவனத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை  அமைதியான ஆர்ப்பாட்டமும் சாலைமறியல் போராட்டமும் இடம்பெற்றது.

ஓட்டமாவடி காவத்தமுனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நோர்வே அகதிகளுக்கான நிறுவனம் வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படுகின்ற 80 வீடுகளில் 40 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் பூரணப்படுத்தப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இடைநிறுத்தப்பட்டுள்ள 40 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பெருமளவிலான ஆண்களும் பெண்களும் இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X