2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

'கிழக்கு மாகாண பட்தாரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செ

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)
 
கிழக்கு மாகாணத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க மத்திய, மாகாண அரசுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
 
கிழக்கு மாகாணத்தில் உள்வாரி,  வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் 3500க்கும் மேற்பட்டவர்கள் வேலையற்று இருக்கிறார்கள். இவர்கள் சுமார் 10 வருடங்களாக வழங்கப்பட்ட நியமனங்களில் உள்வாங்கப்படாமலும் தங்களுக்கு பொருத்தமான எவ்வித வேலைவாய்ப்போ தொழில் வழிகாட்டல் வழிமுறைகளோ இன்றியும் 45 வயதையும் கடந்து இருக்கின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைப்பிரிவில் சுமார் 1300 பேரும் ஏனைய பிரிவுகளில் 200 பேரும் உள்ளனர். உள்வாரியாக பட்டப்படிப்பை முடித்த 450பேர்களிலும் வெளிவாரியாக பட்டப்படிப்பை முடித்த 1050 பேர்களிலும் சுமார் 75 பேர்கள் மாத்திரம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்பை பெற்றுள்ளனர்.
 
இவர்கள் யுத்த சூழ் நிலையில், உயிராபத்துக்கு மத்தியிலும் வறுமையில் பல்வேறு கஸ்ரங்களுக்கும் மத்தியிலும்; தங்கள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த காலத்தைப் போல் அரசாங்கம் பல துறைகளிலும்  தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்னும் நம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் நியாயமானவைகளாகும்.
 
பட்டதாரிகளை அவர்களின் தராதரத்திற்கு ஏற்றவாறு துறைசார்ந்த  பணிகளில் ஊக்குவிக்கக்கூடிய எந்தத்திட்டத்தையாவது கிழக்கு மாகாண சபை முன்வைத்துள்ளதா என்பது பட்டதாரிகளுக்கு மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களாகும்.
 
மத்திய அரசின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணம் ஒவ்வொரு வருடமும் 400 - 600 இடைப்பட்டபேரை நியமிக்கும் முறைமையை கடைப்பிடித்து வருகின்றது. இந்நியமனங்கள் சகல திணைகளைங்களையும் உள்ளடக்கியவையாகும். இந்த வழிமுறையையே பட்டதாரிகள் தொடர்பாக கிழக்கு மாகாணசபை  பின்பற்றுகின்றது.

இதன் காரணமாக பட்டதாரிகளும் என்றோ ஒருநாள் தமக்கும் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்நடைமுறையால் வருடாந்தம் கிழக்கு மாகாணத்தில் 2500பேர் நியமனம் கிடைக்காமல் இருந்து கொண்டே வருகின்றனர்.
 
ஆனால் இதனையும் சீர்குலைக்கும் வகையில் நியமன விதிகளுக்கு மாறான செயற்பாடுகள் ஊடாக சில அரசியல்வாதிகள் ஒருசிலருக்கு நியமனம் வழங்க முயற்ச்சிகள் மேற்கொள்வதால் பட்டதாரிகள் மத்தியில் விரக்தியும் மனக்கவலையும் ஏற்பட்டுள்ளது.
 
விசேடமாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வாக்குகளைபெறும் நோக்கில் பலபொய்களை கூறி ஏமாற்றுகின்றனர். இதனால் அரசியல்வாதிகள் அனைவரையும் வெறுக்கும் அளவிற்கு அவர்களின் மனநிலை உள்ளது. இந்த அரசியல்வாதிகள் மனிதத் தன்மை உடையவர்களாக இருந்தால் பொய்வாக்குறுதிகளை கூறாமல் 45வயதை எட்டப்போகின்றவர்களுக்கும், விசேட தகைமை உள்ளவர்களுக்கும் இந்நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
மேலதிகமாக உள்ள பட்டதாரிகளின் நலன்கள் தொடர்பாக கிழக்கு மாகாணசபை ஒரு திட்டத்தை முன்வைத்து செயற்பட வேண்டும். பட்டதாரிகள் அரசியல் வாதிகளையும் அமைச்சர்களையும் சந்தித்தும் வெகுஜனபோராட்டங்களை நாடாத்தி  பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் போது ஆளணி வெற்றிடம் இல்லை பணம் இல்லை  என்று மகாண சபை கூறுகிறது.மேலும் இது மத்திய அரசின் வேலை என்றும் கூறி மாகாண சபை தப்பிக்கப்பார்கின்றது.
 
அப்படியானால் எதற்கு இந்த மாகாணசபை என்று பட்டதாரிகள் கேட்பது பொருத்தமான கேள்வியாகவே உள்ளது. இவ்விடயம் தொடர்பாக  ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய கலுந்தரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளனர்.
 
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கிழக்கு மகாண சபையின் ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரும் தோளோடு தோள் சேர்ந்து முயற்சிகள் எடுக்க முன்வரவேண்டும்' எனவும்  வர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X