2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்டு. இராணுவ வீரருக்கு வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

இராணுவ வீரர்களுக்காக அமைக்கப்படும் ரனவிரு வீட்டுத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ வீரர் ஒருவருக்கான வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை, சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அயோமா ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காகித நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ்வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--