2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் நடைபெறும்  சர்வதேச  வர்த்தக கண்காட்சியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று காலை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

பலநாடுகளின் பங்களிப்புடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று வெள்ளிக்கிழமை  கிழக்குமாகாண  முதலமைச்சர் சினநேசத்துரை சந்திரகாந்தன் பிரதியமைச்சர்களான பஷீர் சேகு தாவூத், எம்.எல்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கு கொண்டுள்ளனர். இக்கண்காட்சியில் சுமார் 150  காட்சி கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--