Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
'நமது நாட்டின் அபிவிருத்திப்பாதையில் குடும்ப வருமானத்தை மட்டுமல்லாது தனி நபர் ஜீவிக்கும் வழிமுறையினையும் காட்டியுள்ளோம். கடந்த காலங்களில் விவசாயம் மூலம் தமது அன்றாட வாழ்வாதாரங்களை மக்கள் நிவர்த்திசெய்து வந்தனர். மழை ஆரம்பிக்கு முன்னர் நிலத்தை பண்படுத்தி விவசாயத்தை மேற்கொள்வார்கள். மழை காலம் வந்த பின்னர் குளம் நிரம்பி சேற்றுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வர்.
மிகுதியான நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குடிசைத்தொழில் செய்வது மரபாக இருந்தது. அதன் காரணமாக அனைத்தையும் அவர்கள் வீட்டில் இருந்து பெற்றுக்கொண்டனர். உப்பு வாங்குவதற்கும் வாசனைப் பொருட்கள் வாங்குவதற்குமே கடைகளுக்கு செல்வார்கள் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி - எருவில் பாரதி புரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நெசவு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்குத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தீர்க்க சிந்தனையின் கீழ் உருவாக்கப்பட்ட இராணுவம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இந்த நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எமக்கு மத்தியில் உள்ள கடமை இரண்டாக பிரிந்து நின்ற நிலையை மறந்து ஒன்றாக இணைந்து அபிவிருத்தியை ஏற்படுத்தி எமது சந்ததி சுபிட்சமாக வாழும் நிலையை ஏற்படுத்தவேண்டும். அவ்வாறான அபிவிருத்தியை உங்களுக்கு கொண்டுவர எமது அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்றார்.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025