2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறுவர் தின நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு எஸ்கோ நிறுவனமும் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சிறுவர் கழகங்களும் இணைந்து நடாத்திய சிறுவர் தின விழா இன்று பேத்தாளை குகநேசன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சிறுவர் கழக வலையமைப்புக்களின் தலைவர் வை.லக்கிகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிறுவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சிறுவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய எஸ்கோ நிறுவனத்தின் வெளியிடான தளிர் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--