2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தன்னாமுனைப்பகுதி வீதிகளுக்கு பெயரிடல்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனையைச் சேர்ந்த வீதிகளுக்கு பெயரிடும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி, தன்னாமுனை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினருடன் பங்குநிர்வாகிகளும் இறைமக்களும் இணைந்து தன்னாமுனையை சேர்ந்த வீதிகளுக்கு பெயரிடும் வைபவத்தை நடத்தினர்.

அருட்தந்தை எம்.தேவதாசன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில்  செங்கலடி பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், ஏறாவூர் பொலிஸ் அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Amalan Wednesday, 12 October 2011 08:10 PM

    10. 10. 10. அன்று தொடங்கிய முயற்சி, பல தடைகளையும் தாண்டி 09. 10. 11. இன்று வெற்றி கண்டிருக்கிறது. மனம் தளராமல் உழைத்த தன்னாமுனை இளைஞர் ஒன்றியத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X