Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை மக்களிடம் கையளிக்கவுள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு நாளை விஜயம் செய்யும் ஜனாதிபதி வவுணதீவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதுடன் மட்டக்களபபு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடவள்ளார்.
இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர்களான நிரூபமா ராஜபக்ஷ, எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், பஷீர் சேகுதாவூத், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ரீட்டா ஓ சலிவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழகல் எனும் தொனிப்பொருளில் மஹிந்த சிந்தனை வளமான எதிர்காலம் கொள்கையின் அடிப்படையில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் இந்த நீர் வினியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago