2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

அதிபர், ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் சிலர் தகாத வார்த்தை பிரயோகத்திற்கு எதிராக பகிஷ்கரிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா, எஸ்.மாறன்)

கோறளைப்பற்று, பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் கடமையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் சிலர் தகாத வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்ட சம்பவத்தினை கண்டித்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இன்று புதன்கிழமை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையை நேற்று செவ்வாய்க்கிழமை சூழ்ந்த பெற்றோர்கள் சிலர் பாடசாலை வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர் ஓருவர் மீதும் பாடசாலை அதிபர் மீதும் தாகாதா வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து குறித்த ஒரு ஆசிரியரை தாக்க முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை ஆசிரியர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள போதிலும் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இப்பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக செயற்பட்ட பெற்றோர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் இதன்போது பொலிஸாரைக் கேட்டுக்கொண்டனர்.

குறித்த பாடசாலையில் 652 மாணவர்கள் கல்வி கற்பதோடு 23 ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X