Kogilavani / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்,லோஹித்)
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மதுபானசாலை கூட புதிதாக திறக்கப்படவில்லைனெ மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 85 மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே மதுவரி திணைக்கள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை, இம்மாவட்டத்தில் 53 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளே வழங்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் யுத்தம் நடைபெற்றுகொண்டிருந்த காலத்தில் வழங்கப்பட்டவையே.
2009 இற்குப் பின்னர் பாசிக்குடா மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளில் சுற்றுலா விடுதிகளில் மதுபான விற்பனைக்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகுமென்றார்.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.ரஞ்சன் உட்பட பலர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
14 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
32 minute ago