2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆயித்தியமலை விவசாயிகளுக்கு நெல் விதைகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கெயார் சர்வதேச நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 26 விவசாயிகளுக்கு நல்லின நெல்விதைகள் வழங்கும் நிகழ்வு ஆயித்தியமலை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது

இத்திட்டத்தில் பாவக்கொடிச்சேனை, ஆயித்தியமலை, யுத்பாம் ஆகிய பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 26 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக பிஐப் 300, பிஐப் 94௧, பிஐப் 358 ஆகிய இனத்தைசேர்ந்த 554 புசல் நெல் விதைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆயித்தியமலை கிராம சேவையாளர் சிவநாதன் மற்றும் கெயார் சர்வதேச நிறுவன மட்டக்களப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு விதைநெல்லை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--