2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வெல்லாவெளியில், தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, வெல்லாவெளியில் வீடொன்றினுள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை இரவு மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மாரியம்மன் ஆலய வீதியை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டபோது, தூக்கில் தொங்கியமை காரணமாக கழுத்து இறுக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம்   தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X