2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் சாண்டோ சங்கிரதாஸின் உருவ சிலை

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாதனை வீரரின் உருவ சிலை கடந்த பல மாதங்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

வெள்ளைக்காரர்களால் இரும்பு மனிதன் என வர்ணிக்கப்பட்ட இவர்  இலங்கையிலும் இந்தியாவிலும் பல சாகசங்களை நிகழ்த்திய சாகச சாதனை வீரரான சாண்டோ சங்கிரதாஸின் உருவ சிலை கடந்த எட்டு மாதங்களாக கவனிப்பரற்ற நிலையில் கல்லடி உப்போடை நொச்சிமுனை பிரதான வீதியிலுள்ள காணயில் காணப்படுகின்றது.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வீதி விஸ்த்தரிப்பு என்ற போர்வையில் குறித்த சிலை அகற்றப்பட்டது.

வீதி அபிவிருத்தி வேலைகள் முடிந்தும் குறித்த சிலை உரிய இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X