Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 15 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா, ஜிப்ரான், கே.எஸ்.வதனகுமார்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் அவரது இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையும் முன்னிட்டும் சுற்றாடல் துறை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்த தேசத்திற்கு நிழல் (தெயட்ட செவன) தேசிய மர நடுகைத் திட்டத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மர நடுகை வைபம் இடம்பெற்றது.
இதனை முன்னிட்டு, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.01 மணிக்கு மர நடுகை வைபவம் இடம்பெற்றது.
பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளார் எஸ்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தரகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான கோப்பாவெளியிலும் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபாலவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago