2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மீராவோடையில் மரத் தளபாடங்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 17 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மீராவோடைப் பகுதியில்  10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுக்கு பொருத்தப்படும் மரத் தளபாடங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இத்தளபாடங்களை ஏற்றி இறக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட லொறியையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மீராவோடை பகுதியிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லும் முகமாக அனுமதிப்பத்திரமின்றி மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இத்தளபாடங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .