2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வாகன விபத்தில் காத்தான்குடி நபர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து வவுனியாவுக்கு கோழிக்குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்காக டிப்பர் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பயணம் செய்த காத்தான்குடி புதிய காத்தான்குடி பெரிய ஜும் ஆ மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த எம்.பர்சாத் (வயது 25) என்பவர் உயிரிழந்ததுடன் அந்த வாகனத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த சாரதி படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் ஜனாஸாவை காத்தான்குடிக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .