2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மின்சாரம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 18 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை; மின்சாரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் 'முழு நாடும் ஒளிபெறுகிறது' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வம்மிவட்டுவான், அம்மந்தனாவெளி, கிராமத்திற்கும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கொண்டையன்கேணி மற்றும் மாணிக்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மின் சக்;தி எரிபொருள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால, வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.உதயஜீவதாஸ், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.கிரீதரன், இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X