2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மட்டு.பெவர் விளையாட்டரங்கை நவீன முறையில் புனரமைப்பது தொடர்பிலான ஆய்வுக்கூட்டம்

Kogilavani   / 2011 நவம்பர் 19 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு பெவர் விளையாட்டரங்கை நவீன முறையில் புனரமைப்பது தொடர்பிலான ஆய்வுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டு. மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அழுத்கமகேவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை  சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ் வெபர் அரங்கை சகல வசதிகளையும் கொண்ட நவீன விளையாட்டரங்காக நிர்மாணித்துத் தருவதாக முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் விளையாட்டுத்துரை அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இதற்கமைவாக, இவ் பெவர் விளையாட்டரங்கானது 10ஏக்கர் விசாலமான காணியில் சகல வசதிகளையும் கொண்ட நவீன முறையிலான விளையாட்டரங்காக எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் அமையப்பெறவுள்ளது.

இவ் ஆய்வுக் கூட்டத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீத்தா பிரபாகரன், மாநகரசபை பிரதி மேயர் ஜோர்ஜபிள்ளை, பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ஈஸ்வரன், மாநகரசபை பொறியியலாளர் சஞ்சீவன், மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .