2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

உளவளத்துறை பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு சுகாதார நல கல்வி நிலையத்தினால் நடத்தப்பட்ட உளவளத்துறை பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று மட்டக்களப்பு, கல்லடி சிவாநந்தா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சுகாதார நல கல்வி நிலையத்தின் தலைவர் எஸ்.பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் திருமதி கஸ்த்தூரி குகன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட விசாரணை அதிகாரி ஏ.எசி.ஏ.அஸீஸ் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உளவளத்துறை பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் ஊடக சேவையை பாராட்டி அவர் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0

 • MM.siththiq Monday, 21 November 2011 09:43 PM

  யாரை யார் கௌரவிப்பதென்று தெரியாத உலகம்.

  Reply : 0       0

  tharshaJP Monday, 21 November 2011 10:14 PM

  இவர் ஊடகதுறையில் செய்த சாதனை என்ன?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .