Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 நவம்பர் 22 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதேச கடற்கரையில் சிதைவடைந்த சடலமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுத்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை பார்வையிட்ட களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.
இச்சடலம் பெண்ணொருவரின் சடலமாக இருக்கலாமென சந்தேகிப்பதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்க தலைமையில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025