2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மட்டக்களப்பில் சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டிருக்கும் 21 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஜனாபா சல்மா அமீர் ஹம்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் கலந்து கொண்டார்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவின் வேண்டுகோளுக்கிணங்க நீதியமைச்சர் றஊப் ஹக்கீமின் சிபாரிசுக்கமைய நீதியமைச்சினால் இச்சமாதான நீதவான்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .