2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மழை வெள்ளத்தால் கச்சக்கொடி சுவாமிமலை கிராம வீதி சேதம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

தற்போது பெய்த பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளைப் பிரதேசத்தின் எல்லையோரக் கிராமமான கச்சக்கொடி சுவாமிமலை கிராமத்தின் பிரதான வீதி முற்றாகச் சேதமடைந்துள்ளது.  

இவ்வீதியைப் பயன்படுத்தி வரும்  பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை, மழை வெள்ளத்தால்  மூழ்கிய  களுவாஞ்சிக்குடி – பெரிய போரதீவு வீதி, வெல்லாவெளி – மண்டூர் வீதி, பாலையடிவட்டை – வெல்லாவெளி வீதி  என்பன தற்போது மக்களின் பாவனைக்குத்  திரும்பியுள்ளன. இவ்வீதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வெள்ளநீர் வடிந்தோடி வருகின்ற நிலையிலேயே போக்குவரத்து சுமூகமாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .