Menaka Mookandi / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
	(கே.எஸ்.வதனகுமார்)
	
	வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 16 கிராம மக்களுக்குரிய சேவைகளை வழங்குவதற்காக வவுணதீவுப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் பொலிஸ் நடமாடும் சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 
	
	வவுணதீவுப் பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி நாணாயக்க மற்றும் பொதுமக்கள் தொடர்பதிகாரி எம்.ஐ.உவைஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஸ் குமாரசிங்க தலைமையில் இந்த நடமாடும்சேவை இடம்பெற்றது.
	
	பொலிஸ் - பொதுமக்களிடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாட்டின் சகல பாகங்களிலும் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்று வரும் நிலையில் வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றது.
	
	இந்நடமாடும் வேவையினூடாக பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதன் போது தொலைந்த ஆவணங்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், உடன் முறைப்பாட்டுப் பிரதிகளை வழங்கல், சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் என்பன இடம்பெற்றதுடன் இலவச வைத்திய முகாம், இலவச இரத்தப் பரிசோதனை, நுளம்பு வலை வழங்கல், காலங்கடந்த திருமணப்பதிவுகளைச் செய்தல், இணக்கமன்றத்தினூடான பிணக்குகள் தீர்த்தல், வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
	.jpg)
5 minute ago
7 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
11 minute ago
1 hours ago