2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

களுதாவளைக் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், எம்.சுக்ரி))

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  களுதாவளை கிராமத்தில் சுனாமி காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டன.  

களுதாவளைக் கிராமத்தில் 6 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகள் பயனாளிகளிடம்  கையளித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடனும்  அமெரிக்க நூத்றன் நிவாரண நிறுவனத்தின் நிதியுதவியுடனும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை கிரேற்றன் அவுஸ்கோன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், அமெரிக்க நூத்றன் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .