2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தலைமைத்துவ பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கிழக்கு மாகாண மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தால் நடத்தப்பட்ட  மகளிருக்கான தலைமைத்துவப் பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சால்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 விளையாட்டுக் கழகங்களுக்கு தலா 25,000 ரூபா வீதம் 275,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

அத்துடன், கிழக்கு மாகாண மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தால் 5 நாட்கள் நடைபெற்ற தலைமைத்துவ பயிற்சியை முடித்த 75 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களின் ஒன்றியத் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X