2021 ஜனவரி 27, புதன்கிழமை

பொது நீர்க்குழாய் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவஸ்த்தை

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொதுச்சந்தைக்குள் அமைக்கப்பட்டுள்ள  நீர்க்குழாயானது தினமும் மூடப்பட்டுள்ளதால் பொதுச்சந்தை வர்த்தகர்களும் நுகர்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பொது நீர்க்குழாய் அமைந்துள்ள இடத்தில் பூந்தோட்டத்தை அமைத்துவிட்டு அதற்கு பாதுகாப்பாக இரும்புக்கூடும் அமைத்து பூட்டுப்போடப்பட்டுள்ளதால் குடிநீரை பெறமுடியாது மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்நீர்குழாய் அதிகமான நேரம் மூடப்பட்டிருப்பதாக அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாநகரசபை ஊழியர்களிடம் கேட்டபோது,  பூக்கன்றுகளை கட்டாக்காலிகள் உண்டுவிடும் என்பதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .