2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பனங்கன்றுகள் நடும் நடவடிக்கை

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

பனை அபிவிருத்தி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் பனங்கன்றுகள் நடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சிறுகைத்தொழில் பாரம்பரிய முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் பேரிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின்கீழ் ஆரையம்பதி பிரதேசத்திற்கான பனங்கன்றுகள் நடும் நடவடிக்கை பாலமுனை விளையாட்டரங்கில் நேற்று மாலை பனை அபிவிருத்தி சபையின் இணைப்பாளர் ரி.விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா,  பனை அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் கே.தேவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 200 பனங்கன்றுகள் நடப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .