2021 ஜனவரி 23, சனிக்கிழமை

டெங்கு நுளம்புக்கு ஏற்றவகையில் சூழலை வைத்திருந்த ஆறு பேர்மீது வழக்கு தாக்கல்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடியவாறு தமது வீட்டுச்சூழலை வைத்திருந்த 6 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் கே.தேவநேசன் தெரிவித்தார்.

இப்பகுதியில், பொலிஸாரின் உதவியுடன் மாநகர சபை மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெறுகும் வகையில் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் ஒரு ஹோட்டல் உரிமையாளர் உள்ளடங்களாக ஆறுபேர் மீது வழக்குத்தாக்கல்; செய்யப்பட்டுள்ளது.

43 வீடுகள் மற்றும் உணவகங்கள் மீது சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணியக பொது சுகாராத பரிசோதகர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.செனவிரட்ன தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள் குழு சோதனை நடவடிக்கைகையை முன்னெடுத்திருந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .