2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மாகாண சுற்றுலாத்துறை அமைச்சர் - மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரிலுள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது ஏராளமான பொதுமக்கள் அமைச்சரைச் சந்தித்து தமது குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இச் சந்திப்பில், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாத்தியமான வழிகள் மூலம் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஏறாவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • Aly Saturday, 10 November 2012 11:58 AM

  நல்ல காலம் இரண்டாவது படத்தை பிரசுரித்தீர்கள், முதலாவது படத்தில் யார் அமைச்சர் என்று புரியவில்லை.

  Reply : 0       0

  எல்லாளன் Saturday, 10 November 2012 03:49 PM

  புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்

  Reply : 0       0

  Minwar Sunday, 11 November 2012 11:04 AM

  ஒரு அமைச்சர் பற்றிய செய்தியை நீ்ங்களே பிரசுரித்து விட்டு, அதற்காக மிகவும் மோசமான, கீழ்தரமான வார்த்தைகளைக் கொண்ட பின்னூட்டங்களைப் பதிவிட்டுள்ளீர்கள். இது தமிழ் மிரர் பற்றிய மோசமான எண்ணத்தை நாகரீகமுள்ளவர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுமல்லவா? தமிழ் மிரருக்கென்று உள்ள பெயரை நீங்களாகவே இப்படிக் கெடுத்துக் கொள்கிறீர்களே. சின்னப் பெடியள்கள் நடத்துற இணையத்தளங்களில்தான் இப்படியான பின்னூட்டங்களைப் பதிவிடுவார்கள். தமிழ் மிரருக்கு வேண்டாமே.

  ஆசிரியர் குறிப்பு:
  பின்னூட்டல்கள் சுயமாக எங்களால் இடப்படுவவையல்ல என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் குறிப்பிடுவதுபோல் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்கள் இங்கு பிரயோகிக்கப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்க. தமிழ்மிரர் என்றும் நடுநிலையாகவே செயற்படும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .