2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

முன்னாள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அரசதரப்பு உறுப்பினரின் வீட்டுக்கு சேதம் விளைவிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடியிலுள்ள முன்னாள் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் அரசதரப்பு உறுப்பினரும் முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருமான எஸ்.எம்.இஸ்ஸதீன் என்பவரின் வீடு இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இவரின் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் கதவுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .