2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் சிறுமி மீது மோதியது: சிறுமி படுகாயம்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளையையும் மீறி வாகனத்தை செலுத்தியது மட்டுமல்லாமல் சிறுமியொருவரையும் மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் வாகனத்தை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்; அதில் பயணித்த நபரொருவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை வாழைச்சேனை மீறாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது

இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான  8 வயது சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் யாக்கூப் பாத்திமா ஸஹ்ரா என்ற மாணவியே காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து அம்பாரை நோக்கி பயணித்த காரொன்று  வாழைச்சேனை நாவலடி ஊடாக ஊடறுத்துச் செல்லும் வேளையில் அவ்வாகனத்தை சோதனையிடுவதற்காக மோட்டார் போக்குவர்த்து பொலிஸார்  இடைமறித்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்திய சாரதி மீறாவோடை உள் வீதி வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பாடசாலை மாணவி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்;ந்து வாகனத்தின் சாரதியும் மற்றுமொருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன் குறித்த கப் வண்டியில் பயணித்த சக பயணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையினை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .