2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுருக்கு வலை கொண்டு மீன் பிடிப்பத்தல் தொடர்பாக மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட உயர்மட்ட மாநாடு நேற்று மாலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.கிரிதரன், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்திலுள்ள பல மீனவர்கள் சட்டத்திற்கு முரணான வகையில்;; சுருக்கு வலைமூலம்   மீன்படித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்மீது பொலிஸாரின் உதவியுடன் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இதேவேளை, 'மீன்பிடி வலை 225 மீற்றருக்கு உட்பட்டிருத்தல், 25 மீற்றர் ஆழத்திற்குட்பட்டிருத்தல், ஒன்றரை அங்குலத்திற்கு மேற்பட்ட கணவளவை கொண்ட வலை, 7 கடல் மைல்களுக்கு அப்பால் செல்லக்கூடாது, ஒளி பாய்ச்சி மீன் பிடித்தல் தடை போன்ற கடற்றொழில் அமைச்சின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் மீனவர்களுக்கே சுருக்கு வலை மீன்பிடித்தலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.

'ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மீனவருக்காவது இத்தயை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .