2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பேத்தாழையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்குடாப் பொலிஸாரின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை நடமாடும் சேவை நடைபெற்றது. கல்குடாப் பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை, கல்மடு, கல்குடா, வெம்பு ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்நடமாடும் சேவையின் மூலம் பயனடைந்தனர்.

வைத்திய சேவை, கடற்றொழில் நீரியல்வள அலுவலகம், பிரதேசசபைக் காரியாலயம், பிரதேச செயலக பிரிவு, வாகன போக்குவரத்துப் பிரிவு, பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவு, ஆயுர்வேத மருத்துவ சேவை, பிறப்பு, மற்றும்  திருமண பதிவுப் பிரிவு, மத்தியஸ்தசபை, வனவள பாதுகாப்பு அலுவலகம், வாழைச்சேனை சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்றுநோய் பிரிவு ஆகியன தங்களது சேவைகளை வழங்கின.

இதன்போது தென்னை அபிவிருத்திச் சபையால் இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.  எஸ்கோ நிறுவனம் மற்றும் ஆசிய அமைப்பின் அனுசரணையில்  ஏழை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்  வழங்கப்பட்டன. அத்துடன், பதிவுகளுக்கான முத்திரைக் கட்டணம், அடையாள அட்டைக்கான புகைப்படம் மற்றும் முதியோர் அடையாள அட்டை என்பவற்றுக்கான புகைப்படங்களை இலவசமாக சமாதானத்திற்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை வழங்கியது.

கல்குடாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.கே.வி.சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் வாழைச்சேனை பிரிவுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ரத்நாயக்க, வாழைச்சேனை பிரதேச செயல உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, பிரதேச சிவில் பாதுகாப்புக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .