2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய உண்டியலிருந்து பணம், தங்க ஆபரணங்கள் கொள்ளை

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமை வாய்ந்த மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயத்தில் இரண்டு உண்டியல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கேதார ஈஸ்வர கௌரி விரத சடங்குகளின் பின்னர் இந்த உண்டியல்களில் பெருந்தொகைப் பணம் மற்றும் நேர்த்திக்காக வந்த ஆபணரங்களும் சேர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வாயில் உள்ள உண்டியல் மற்றும் அங்குள்ள முருகன் ஆலய உண்டியல் என்பன அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு ஆலயத்தின் பின்புறமாக போடப்பட்டிருந்தன. உண்டியல் பூட்டுக்கள் வெட்டப்பட்டு கொள்ளை இடம்பெற்றுள்ளன.

ஏறாவூர் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .