2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வாழைச்சேனையில் தேசத்திற்கு நிழல் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


தேசத்திற்கு நிழல் (தயட்ட செவன) என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ரயில் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாவது ஆண்டை முன்னிட்டும் தேசத்திற்கு நிழல் (தயட்ட செவன) வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

வாழைச்சேனை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.அப்துல் கபூர், உதவி புகையிரத நிலைய அதிபர் ஏ.யூ.என்.நுபைஸ் மற்றும் புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரங்களை நாட்டினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .