2021 ஜனவரி 23, சனிக்கிழமை

திவிநெகும அறிவூட்டும் செயற்திட்டம் ஆரம்பம்

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

திவிநெகும திணைக்களம் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. 
இது தொடர்பிலான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஏ.மனோகிதராஜ், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம், வலய முகாமையாளர்களான ஏ.எல்.சுல்மி மற்றும் ஏ.பரமலிங்கம் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் முக்கியஸ்த்தர்கள், சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், அதன் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது திவிநெகும திட்டம் தொடர்பாகவும் அதன் செயற்பாடு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .