2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கிழக்கு பல்கலை விஞ்ஞான பீட மாணவர் பகிஷ்கரிப்பு முடிவு

Super User   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டள்ளது.

எமது கோரிக்கைகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரினால் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள தீர்வுகளை ஏற்றுக்கொண்டு பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வார காலமாக பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிழக்கு ல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக உபவேந்தருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

சிரேஷ்ட மாணவர்களின் பரீட்சை முடிவுகளை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதென்றும் கடந்த  ஒரு வருட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் பரீட்சையை எதிர்வரும் 28ஆம் திகதி நடத்துவதற்கும் இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்து வருகின்ற இரண்டு மாதங்களுக்குள் நிர்வாகத்துடன் கலந்துரையாடி ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாகவும் உப வேந்தர் உறுதியளித்துள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

விஞ்ஞான பீட மாணவர் சங்க தலைவர் உட்பட  மேலும் 5 மாணவ பிரதிநிதிகள்; உப வேந்தருடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .