2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கணினிகளும் விளையாட்டு உபகரணங்களும் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுநிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் கணினி உபகரணங்களையும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை வழங்கிவைத்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டதாக  பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .