2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் சிற்றுண்டிச்சாலையிருந்து பழுதடைந்த உணவுப்பொருட்கள் மீட்பு

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் சிற்றுண்டிச்சாலையிருந்து பெருமளவிலான மனித பாவனைக்கு உதவாத, பழுதடைந்த சமைத்த மற்றும் சமைக்காத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கல்லடி பொது சுகாதார பரிசோதகர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பொலிஸாரின் உதவியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை மேற்கொண்ட தீடிர் தேடுதலின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்தர் மீது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதே வளாகத்தில் நுளம்புகள் பெருகும் விதத்தில் சூழலை வைத்திருந்த மற்றொருவரும் சுகாதார பிரிசோதகரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லடி பொது சுகாதார பரிசோதகர் கே.ராஜ்குமார் நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்;.செனவிரட்ன ஆகியோரின் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .