2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி வங்கிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறில் சமுர்த்தி வங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அதிகாரசபை இதற்காக 25 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதுடன் பொதுமக்களின் நான்கு இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் இந்த வங்கி கட்டிடம் அமைக்கப்பட்டவுள்ளது.

பெரியகல்லாறு பிரதேச சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் பி.தவேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமுர்த்த அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.குணரெட்னம், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர், களுவாஞ்சிகுடி பிராந்திய சமுர்த்தி முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துமுகமாக சமுர்த்தி வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரதேசம் தோறும் அமைக்கப்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகள் மூலம் சமூக வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தமுடியும் என களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .