2021 மே 06, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இ.போ.ச பேரூந்து சேவைகள் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும்; அடை மழையால்  இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் துரை மனோகரன் தெரிவித்தார்.

மட்;டக்களப்பு போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் முனைக்காடு, கரவெட்டி, பாவற்கொடிச்சேனை, புலிபாய்ந்தகல், வலையிறவு, பாலமுனை, போன்ற இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளும் பதுளை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி. கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சாலையிலிருந்து புறப்படும் மண்டூர், பாலையடிவடை, திக்கோடை, முதலைக்குடா, திருப்பழுகாமம், மகிழூர், போன்ற இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடநிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர் களுவாஞ்சிகுடி போக்குவரத்து சாலை வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதனைவிட கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் மாத்திரம் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .