2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கிறிஸ்மஸ் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

இன்று செவ்வாய்க்கிழமை காலை கிறிஸ்மஸ் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த யுவதி ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமான சம்பவமொன்று மட்டக்களப்பு பெரிய ஊறணியில் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர் மட்டக்களப்பு செல்வநாயகம் வீதி பெரிய ஊறணியைச் சேர்ந்த நாகலிங்கம் நிராஜினி (வயது 20) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக இன்று காலை உணவுப் பண்டங்களையும் இன்னபிற ஏற்பாடுகளையும் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயம் திடீரென சளியுடன் கூடிய வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சேர்க்கப்பட்ட போதும், காலை எட்டு மணியளவில் சிகிச்சை பயனளிக்காது அவர் மரணமானார்.

இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர பரீட்சை எழுதிவிட்டு பரீட்சை முடிவுகளுக்காக இவர் காத்திருந்தவர் என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர் டிக்கிரி பண்டா குணத்திலக்க முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எம்.எஸ். நஸீர் அவர்களால் இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .