2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான இராணமடு, மையிலவெட்டுவான், வந்தாறுமூலை, மற்றும் பண்டாரியாவெளி போன்ற பகுதிகளில் அவசர நடமாடும் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அகில இலங்கை இந்து மகா சபை, மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் மங்கயற்கரசி இல்லம் போன்றவை இணைந்து இந்த மருத்துவ முகாம்களை நடத்துகின்றனர்.

யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பகீரதன் தலைமையில், டாக்டர் லவகுமாரன் உட்பட பல வைத்தியர்கள் இணைந்து பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மங்கயற்கரசியார் இல்லத்தின் கதிர் பாரதி தாசன் மேற்கொண்டிருந்தார். இவ் மருத்துவ சேவையில், தம்பிலுவில் சிவதொண்டர் அணியைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தோல் நோய்கள், சளி, காய்ச்சல் குளிர்வாதம் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.  இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .