2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உறுகாமம் குளத்தை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பார்வை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களில் ஒன்றான உறுகாமம் குளத்தை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று  செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டார்.

உறுகாமம் குளத்தின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் தற்போதுள்ள அதன் நீர்மட்டம் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களப் பணி;;ப்பாளர் மோகனராஜிடம் பிரதியமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து உறுகாமம், உன்னிச்சை, நவகிரி உள்ளிட்ட குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன.

இதன்போது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களப்பணிப்பாளர் மோகனராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .