2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலவச வைத்திய முகாம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை  ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வைத்திய முகாம் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றது.
 
இந்தவகையில் யாழ்ப்பாணம் சிவத்தமிழ் மானிட விடியற் கழகத்தின் வைத்தியர்கள், அம்பாறை மாவட்ட வைத்திய சிவத்தொண்டர் அணியினர், மட்டக்களப்பு மங்கையற்கரசியர் மகளீர் இல்லம் என்பன இதனுடன் இணைந்து மக்களுக்கு சேவையை வழங்குகின்றர்.
 
மட்டக்களப்பு மங்கையற்கரசியர் மகளிர் இல்ல வாகன உதவி, மருந்து உதவி, ஏனைய அவசிய உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கான ஒழுங்கமைப்பு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
 
இவ்வகையில் சிவத்தமிழ் மானிட விடியற் கழக மருந்துவர் ப.நந்தகுமார், மருத்துவர், ச.பகீரதன், மருத்துவர் சு.மோகனகுமார், பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ராஜமேனகன், சுகாதார உத்தியோகத்தர் எஸ்.தில்லைராஜா ஆகியோர் இணைந்த யாழ்ப்பாண சிவத்தமிழ் மானிட விடியற் கழகத்தின் சுகாதார குழுவினரும், அம்பாறை மாவட்ட சிவதொண்டர் அமைப்பின் தலைவர் எஸ்.கணேஸ் தலைமையிலான குழுவினரும், மட்டக்களப்பு மங்கையற்கரசியர் மகளீர் இல்ல பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசன் தலைமையிலான குழுவினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை குழுவினரும் இப்பணியில் ஈடுபட்டனர்.
 
இதன் பணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொடுவாமடு இடைத்தங்கல் முகாமில் உள்ள மயிலவட்டவான் மக்கள், நணமடு கிராமம், பண்டாரியாவெளி கிராமம், சித்தாண்டி கிராமம் உட்பட்ட பல இடங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X