2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது முறையாகவும் பனிச்சங்கேணி பாலம் சேதம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் இரண்டாவது தடவையாக பனிச்சங்கேணி பாலம் உடைபட்டு அதில் ஏழு அடி உயரத்துக்கு நீர் மேலேழுந்த வண்ணம் செல்வதால் மட்டக்களப்பு திருமலை பாதை துண்டிக்கப்பட்டதுடன் வாகரைப் பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
 
சனிக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் பாதை துண்டிக்கப்பட்டால் படகு மூலம் மிகுந்த ஆபத்தின் மத்தியில் பயணம் செய்ய வேண்டி ஏற்பட்டது. இதற்கு காரணம் பொலநறுவை பராக்கிரமபாகு சமூத்திரத்தில் 12 அடி வான்கதவு திறக்கப்பட்டமையாகும்.

இதனால் வாகரைப் பிரதேசத்தின் கதிரவெளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, பால்சேனை, வம்மிவட்டவான், புளியங்கண்டலடி, கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, ஊரியன்கட்டு, அழகாபுரி உட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
 
இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்பு, அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
 
அங்கு சென்று சகல கிராமங்களையும், இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன், மக்களுக்கு தேவையான அவசிய பொருட்கள், சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள், சிறுவர்களுக்கான நுளம்பு வலைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அவசிய பொருட்களை வழங்கி வைத்தார்.
 
இவருடன் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் எஸ்.வசந்தராஜா, அதன் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளருமான சா.மதிசுதன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் அனர்த்த சேவைக் குழுவினரகள்;, செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் விஜயம் செய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .