2021 ஜனவரி 20, புதன்கிழமை

யானை தாக்கி இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியபுல்லுமலை, கொச்சித்தோட்டம் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரொருவர்
படுகாயமடைந்துள்ளார்.

இவர் சிகிச்சைக்காக கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அன்றையதினம் அப்பகுதியிலுள்ள நெல்வயல்களையும் தோட்டங்களையும் இவ் யானை சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .