2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

2012,2013 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது விழா

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2012ஆம் 2013ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதனின் ஏற்பாட்டில் மகாஜனக் கல்லூரி கவிஞர் எருவில்மூர்த்தி தமிழியல் அரங்கில் இடம்பெறவுள்ளது.

2012ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வானது பேராதனைப் பல்கலைக் கழக உளவியல் மற்றும் மெய்யியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் தலைமையில் இடம்பெறும்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ.; போதனா வைத்தியசாலை வைத்தியக்கலாநிதி பூ.லக்ஸ்மன் கலந்துகொள்ளவுள்ளதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக் கழக இலங்கைக்கான பணிப்பாளர் சோ.திருச்செல்வம் கலந்துகொள்ளவுள்ளார்.

இதே வேளை 2013 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழா கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ் தலைமையில் இடம் பெறும்.

இந்நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய நிபுணர் ப.யோகானந் கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினராக போரம்ஸ் சிட்டி சென்டர் பணிப்பாளர் சி.லெ.முஹம்மது ஆரிப் கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .