2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக போராட்டம்

Super User   / 2013 ஜனவரி 02 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி விவசாய திட்ட விவசாயிகள் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க கோரி இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போரட்டத்தை மேற்கொண்டனர்.

வாகனேரி திட்ட விவசாய பிரிவில் 13 கண்டத்தில் 8,500 ஏக்கர் விவசாயக் காணிகள் உள்ளன. இப்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெறுவதால் இப்பிரதேச விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் மண் அகழ்வு வேலையினை தடை செய்யுமாறு கூறி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற் கொண்டனர்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீரவிடம் மகஜரும் கையளித்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .